ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 196 ரன்களை குவித்து, 197 ரன்களை விரட்டிய தென்னாப்பிரிக்காவை வெறும் 89 ரன்களுக்கு சுருட்டி, 107 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.
சொந்த மண்ணில் முதல் போட்டியில் படுதோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது போட்டியில் வெற்றி முனைப்பில் இறங்கியுள்ளது. அதேவேளையில் இந்த போட்டியிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
போர்ட் எலிசபெத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் மரண அடி வாங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்க அணியில் கடந்த போட்டியில் ஆடிய ஜேஜே ஸ்மட்ஸ், ஸ்டெய்ன் மற்றும் ஃபெலுக்வாயோ ஆகிய மூவரும் நீக்கப்பட்டு, ரீஸா ஹென்ரிக்ஸ், ப்ரிட்டோரியஸ் மற்றும் நோர்ட்ஜே ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணி:
குயிண்டன் டி காக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ஃபாஃப் டுப்ளெசிஸ், வாண்டெர் டசன், டேவிட் மில்லர், பில்ஜோன், ப்ரிட்டோரியஸ், ரபாடா, நோர்ட்ஜே, லிங்கி இங்கிடி, ஷாம்ஸி.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா.