Loading...
பிலிமதலாவ போயகம பிரதேசத்தில் எலுகொடை ஓயாவில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இந்த சடலம் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
Loading...
உயிரிழந்த இராணுவ வீரர் போயகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், 25 வயதுடையவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இராணுவத்தில் பணியாற்றும் இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்ததாகவும், இவரது மரணம் தொடர்பில் இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மரணம் தொடர்பில் தவுலகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
Loading...