பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு இரண்டாவது இடத்தினை பிடித்த சாண்டி தனது நடனப்பள்ளியில் நான்காவது மாடியின் திறப்பு விழாவை இன்று வைத்துள்ளார்.
இதில் பிக்பாஸில் கலந்து கொண்ட பிரபலங்கள் சரவணன், தர்ஷன், ரேஷ்மா, ஷெரின் என அனைவரும் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தியுள்ளனர்.
நடிகர் சரவணனுடன் எடுத்த புகைப்படம் தர்ஷன் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். தர்ஷன் காதலுக்கு பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டு தற்போது மகிழ்ச்சியாக இருக்கின்றார். ஆனால் இந்த விழாவிற்கு ஷெரினும் வந்துள்ளார். மீண்டும் ஷெரினை வைத்து சனம் குற்றச்சாட்டு எதும் வைத்துவிடுவாரோ என்ற கேள்விக்குறியில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
நேற்று டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது மச்சினிச்சியின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படமும் தீயாய் பரவி வருகின்றது.