இளைஞருடன் மனைவி உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மனவேதனையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (40). இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு 10 வயதில் மகன் உள்ளார். வினோத்குமார் அடிக்கடி குடித்துவிட்டு கொடுமைப்படுத்தியதால் மனைவி ரேவதி விரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், தனியாக வாழ்ந்து வந்த போது ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியது. இதனையடுத்து, வெளியூரில் மனைவி குடித்தனம் நடத்தி வந்த ரேவதி. சில ஆண்டுகளுக்கு முன் வினோத்குமாரின் வீட்டின் அருகே வாடகை குடியிருந்து வருகின்றனர். தனது வீட்டின் அருகே மனைவி இன்னொருவருடன் குடும்பம் நடத்துவதை கண்டு வினோத்குமார் விரக்தியடைந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு வினோத்குமார் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.