மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயாராக இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திடீர்னே பேட்டி அளித்துள்ளார்.
ஜெ.வின் அண்ணன் ஜெயக்குமாருக்கு தீபா என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர். தீபா சிறுமியாக இருந்தபோது ஜெயலலிதா அவரை மிகுந்த செல்லத்துடன் வளர்த்து வந்தார்.
அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் போயஸ் தோட்டத்திற்கு சசிகலா வந்தபிறகு இந்நிலை திடீரென மாற தொடங்கியது.
தீபா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஜெவுக்கும் தீபாவுக்கும் இடையே இருந்த உறவு முற்றிலும் அறுந்து போனது.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரை பார்க்க தீபா பலமுறை முயன்றுள்ளார்.
ஆனால் ஜெ.வை பார்க்க விடாமல் தீபா விரட்டியடிக்க பட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணமடைந்து அவரது உடல் ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கபட்டிருந்தபோது கூட மிகுந்த போராட்டங்களுக்கு இடையே தீபாவுக்கு ஒரு நிமிடம் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி தரப்பட்டது.
இதனால் சசிகலாவுக்கும் தீபாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்கில செய்தி சானலுக்கு பேட்டியளித்த தீபா பொதுமக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து தங்கள் குடும்பத்தை சசிகலா தான் விரட்டியடித்தார் என்றும் தீபா உருக்கத்துடன் தெரிவித்தார்.