சென்னையில் தொழிலதிபர்கள் வீட்டில் சிக்கிய பணத்தைக் கொண்டு பலரின் கஷ்டங்களை போக்கலாம் என விஷால் புதிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.
தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 107 கோடி கோடி ரூபாய் பணமும், 127 கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.
இந்த பணத்தை வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு கழிவறை கட்டலாம், தொழுநோய் மற்றும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு நன்கொடை வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் மக்களின் உணவிற்காகவும், அனைத்து விவசாயிகள் மற்றும் கல்விக் கடன்களையும் இந்த பணத்தைக் கொண்டு தள்ளுபடி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
விஷாலின் இந்த கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.