பிரித்தானியாவில் ஆப்கான் அகதி இளைஞன் ஒருவன் குத்திக் கொலை செய்யப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் நகரிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 18 வயதான Khalid Safi இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது மர்ம நபர் ஒருவர் Khalid Safiயின் இதயப் பகுதியில் கத்தியால் குத்தி தப்பி சென்றுள்ளார்.
தகவலறிந்த மருத்துவ உதவியாளர்கள் சம்பவயிடத்திற்கு விரைவதற்கு முன் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
Khalid Safi குறித்த அவரின் நண்பர் ஒருவர் கூறியதாவது, ஆப்கானிலிருந்த வெளியேறிய Khalid Safi கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரான்ஸ் Calais அகதி முகாமில் தங்கியிருந்தார்.
நிம்மதியான, அமைதியான வாழவே அவர் ஆப்கானை விட்டு வெளியேறினார்.
லண்டனில் உள்ள அவரது மாமாவின் கடையில் பணியாற்ற Khalid Safi சமீபத்தில் தான் லண்டன் வந்தார்.
சம்பவம் நடப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் அவர் என்னிடம் போனில் பேசினார், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது, நிகழ்ந்துள்ள இக்கொலையின் மூலம் எங்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை என தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொலை தொர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளம் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பெண், எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்காக ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கொலை குறித்து தகவலறிந்தவர்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.