குடி உடலுக்கும், நாட்டுக்கும் கேடு என்பார்கள். உண்மையில் குடி பழக்கம் உடலையும், நாட்டையும் கெடுப்பதை காட்டிலும் நல்ல உறவுகளை தான் பலமடங்கு அதிகமாக கெடுக்கிறது. குடியால் பிரிந்த, அழிந்த எத்தனையோ உறவுகள், நட்புகள், குடும்பங்கள் இருக்கின்றன.
குடித்த ஒரே காரணத்தால் கண்முன் தெரியாமல் சில சம்பவங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர். இந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர்…
காஷி ராம்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் காஷி ராம். இவர், தனது மனைவி உடலுறவில் ஈடுபட மறுத்த காரணத்தால், விரக்தி அடைந்து குடி போதையில் தனது ஆணுறுப்பை வெட்டிக் கொண்டார்.
12 வருடங்கள்!
காஷி ராமின் மனைவி மஞ்சரி தேவி, 12 வருடங்களாக உடலுறவில் ஈடுபட மறுத்து வருவதால், இந்த செயலில் ஈடுபட்டதாக காஷி ராம் தெரிவிக்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சரி தேவி!
காஷி ராம் – மஞ்சரி தேவிக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகின்றன. காஷி ராம் குடித்துவிட்டு வருவதால் நான் மறுப்பு தெரிவித்தேன். இப்போது அவர் என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார் என கூறியிருக்கிறார் மஞ்சரி தேவி.
குடி, குடியை கெடுக்கும்!
உடலுறவு என்பது மனதளவில் ஒப்புதல் பெற்று, ஒருவரை ஒருவர் விரும்பி இணையும் நிகழ்வாக இருக்க வேண்டும். சாதரணமாக ஒருவரை வற்புறுத்தி உடலுறவில் ஈடுபட கட்டாயப்படுதுவதே தவறு. அதிலும், குடித்துவிட்டு வந்து தாம்பத்தியத்தில் ஈடுபட அழைப்பது மனிதத்தன்மையற்ற செயலாகும்.
வன்முறை!
மனைவியாக இருப்பினும், அவரது விருப்பமின்றி, தாம்பத்திய உறவில் ஈடுபட அழைப்பது, கட்டாயப்படுத்தி ஈடுபடுவது கற்பழிப்புக்கு நிகரான வன்முறை ஆகும். இதை கணவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பாலியல் தொழிலாளி அல்ல!
மனைவி என்பவர் உங்கள் வாழ்வில் இணைந்தவர் அவரை உடலளவில் மட்டும் இணைத்துக் கொள்ள நினைப்பது தவறு. மனைவி என்பவள் பாலியல் தொழிலாளி அல்ல என்பதை குடிப் பழக்கத்தில் உள்ள ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.