கிங் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலம் இயங்கக்கூடிய எடை குறைந்த செயற்கைக் கால்களை உருவாக்கியுள்ளனர்.
உடல் மருத்துவம் மற்றும் கால்களில் மறுவாழ்வுத் துறையில் நவீன தொழில் நுட்பத்தில் குறைந்த எடையுடன், நீண்ட காலம் இயங்கக்கூடிய செயற்கைக் கால்களை பொலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
‘செயற்கைக் கால்களை தயாரிக்க, படிப்படியாக தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்கிலிருந்து பொலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக்கிற்கு மாறியுள்ளோம். பொலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படும் செயற்கைக் கால்கள் இலகுவாக உள்ளன. மேலும், இவை நீண்ட காலம் இயங்கக்கூடியவை. இதனால் நோயாளிகளுக்கு உடல் ரீதியாக நன்மை கிடைக்கும்.
தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செய்யப்படும் சாதனங்கள் பெரும்பாலாக ஒரு வருடத்திற்கு மேலாக நீடிப்பதில்லை. எனவே தான் இதற்கு மாற்றாக புதிதாக பொலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கால்களுக்கு மட்டுமின்றி கைகளுக்கும் பொலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செயற்கை சாதனங்களை உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’ என ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.