உலகத்திலுள்ள எந்த நாட்டிலும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதை ஒருபோதும் கனடிய அரசு அனுமதிக்காது. அது இலங்கைக்கும் பொருந்தும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடடிய நாடாளுடன்றத்தில் நேற்று (27) எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்தபோதே இதனை தெரிவித்தார்.
பழமைவாத கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவருமான கர்னேட்ட் ஜேனுய்ஸ் நேற்று, கனடிய நடாளுமன்ற கேள்வி நேரத்தில் பிரதமரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் கனடிய பாராளுமன்றத்தினால் அனைத்து கட்சிகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட, இலங்கை அரசினால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியான சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் தொடர்பாக ஆளும் லிபரல் அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? கடந்த வாரத்தில் அமெரிக்க அரசினால் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகளுடன் சவேந்திர சில்வாவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாக அவரை நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது. அதேபோன்று இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை கனடாவுக்குள் நுழைய ஆளும் லிபெரல் அரசு தடை விதிக்குமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, உலகத்திலுள்ள எந்த நாட்டிலும் மனித உரிமை மீறல்கள் நடை பெறுவதனை எப்போதும் கனடிய அரசு அனுமதிக்காது, அது இலங்கைக்கும் பொருந்தும் என பதிலளித்தார்.
எனினும், சவேந்திர சில்வா குறித்து வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.