வீடுகள் இல்லாத வறிய மக்களுக்கு சொந்த காணியில் வீடுகள் அமைத்து கொடுப்பதே ஜனாதிபதியில் திட்டம் என்று என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பத்திற்கான வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடு நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்கும் முகமாக முதல் கட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த பயனாளியின் வீட்டில் தென்னங் கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.