சௌபாக்கிய தொலைநோக்கு என்ற தேசிய கொள்கையின் மூலம் வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய ஓய்வூதிய கொடுப்பனவு முறையை ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாரந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது நேற்றைய தினம் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளப்பட்டுள்ளத.
இதன்போது, தகவல் வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன,
ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளதுடன், தற்பொழுது நாட்டுக்கு வெளிநாட்டு நாணயத்தை பெற்றுத்தரும் முக்கிய மூல வளமாக இந்த வெளிநாட்டு பணியாளர்கள் திகழ்கின்றனர்.
அவ்வாறு இருந்த போதிலும் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் அவர்களில் தங்கியுள்ளோரின் சமூக பாதுகாப்புக்காக ஏதேனும் தொகையை சேமிப்பதற்கு முடியாதுள்ளதுடன் இதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வூதிய வயதை எட்டிய பின்னர் பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக சௌபாக்கிய தொலைநோக்கு என்ற தேசிய கொள்கையின் மூலம் வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய ஓய்வூதிய கொடுப்பனவு முறையை ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய சமூக பாதகாப்பு நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக திருத்த சட்ட மூல வரைபை மேற்கொள்வதற்கு தேவையான அடிப்படை திருத்த சட்டமூலத்தை வகுப்பதற்கு விடேச நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்காக திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் தொடர்புகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த புதிய பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.