கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சுவிட்சர்லாந்தில் மக்கள் கூடும் பொதுநிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அங்கு பல உயிர்களை வாங்கிய பின்பு, இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி உயிர்களை கொன்று வருகிறது.
அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் அவரை தவிர நாட்டில் சுமார் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதால், அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் இன்று சுவிட்சர்லாந்து அவசர்கால நடவடிக்கையாக தடை ஒன்றை அறிவித்துள்ளது.
அதன் படி கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான முயற்சியில் 1,000 க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் சுவிட்சர்லாந்து இன்று தடை செய்கிறது.
குறைந்தது இந்த தடை மார்ச் 15-ஆம் திகதி வரை நீடிக்கும் என்று அறிவித்துள்ளது.
பொது நிகழ்ச்சி மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் மீதான இந்த தடை சுவிட்சர்லாந்தில் நோய் பரவுவதை தடுக்கும் அதன் வேகத்தைக் குறைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.