கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம் நோக்கி 50 க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று இரவு சென்ற பேருந்தே விபத்திற்குள்ளானது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா புகையிரத கடவையை அந்த பேருந்து கடந்தபோது, ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ‘பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்’ பேருந்தை மோதித் தள்ளியது.
புகையிரத இயந்திரத்தில் சிக்கிய பேருந்து 150- 200 அடி தொலைவுக்கு இழுத்துச்செல்லப்பட்டது. விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.