நான்கு கட்டங்களாக இலங்கையை இஸ்லாமிய நாடாக அறிவிப்பதற்கு ஜம் இயத்துல் உலமா சபை திட்டம் வகுதிருந்ததாக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் நேற்று ஆஜராகினார்.
அப்போது சாட்சியம் அளிக்கையில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அடிப்படைவாதத்தை வளர்த்தார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய இப்ராஹிம் குடும்பத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நெருங்கி பழகியதாகவும் விஜேதாச ராஜபக்ஷ தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ்நாட்டில் வைத்து இலங்கையின் பெளத்த பிக்கு ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் சிலோன் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் அப்துல் ராசிக் இருப்பதை அந்நாட்டு பொலிஸார் விசாரணையில் உறுதி செய்ததகவும் விஜேதாச ராஜபக்ஷ இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.