நல்லதண்ணி வாழமலை வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் 25 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (28) மாலை வேளையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லதண்ணி வாழ மலை வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தீ, நல்ல தண்ணி சிவனொளிபாதமலை வனப்பகுதி வரை பரவி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களும் பொலிசாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனமையினால் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்ட்டனர். விமானப்படையின் ஹெலிகொப்டர் முலம் மவுசாகலை நீர் தேக்கத்தில் இருந்து நீர் கொண்டு சென்று தீ அணைக்கப்பட்டது.
இந்த விபத்தினால் சைப்ரஸ் மர காட்டுப்பகுதி அழிந்ததுடன், பல அரிய மரங்கள், விலங்குகள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.