வெளிநாட்டிற்கு சென்று இந்தியா திரும்பிய இளைஞர் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளதால், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, இலங்கை போன்ற சில நாடுகளை மட்டும் அதிக அளவில் பாதிக்காமல் விட்டுவைத்துள்ளது.
இந்நிலையில் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தின் பயனூரை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபர், கடந்த வியாழக்கிழமை மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கும் திரும்பியுள்ளார்.
இதனால் அவரிடம் முதல் கட்டமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் இரண்டாவது முறை சோதனைக்காக அவரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ரிப்போர்ட் வருவதற்குள், அந்த நபர் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவர் சரியான மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேரளாவின் சுகாதார துறை அமைச்சர் ஷைலஜா, அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தான் இறந்தாரா என்பதை உறுதியாக கூற முடியாது, அவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவிலே அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.