ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபையினால் தீர்மானிக்கப்படும் என கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள, வேட்புரிமை வழங்குவதற்கு தகுதியற்ற விடயங்களுக்கு மேலதிகமாக குற்ற செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு வேட்புரிமை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கட்சிக்கு தொடர்புடைய தலைவர்கள் கடந்த வாரம் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சி போட்டியிடும் மாவட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ் பொதுவான சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.