முன்னாள் காதலியை பாலியல் வீடியோ காட்சிகள் மூலம் மிரட்டி, கருக்கலைப்பிற்கு வற்புறுத்தியதை ஸ்கார்பரோ சட்டத்தரணி ஒப்புக் கொண்டுள்ளார்.
31 வயதான ஒமர் ஹசன் அல் ஜாஹித் என்ற சட்டத்தரணி, ஒன்ராறியோ நீதிமன்றத்தில் நீதிபதி மிரியம் ப்ளூமன்பீல்ட் முன் குறற்த்தை ஒப்புக் கொண்டார்.
கடந்த ஆண்டு இந்த சம்பவம் நடந்தது.
2018ஆம் ஆண்டில் காதலர் தினத்திலன்று இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் உடலுறவில் ஈடுபட்டபோது, காதலியின் சம்மதத்துடன், சட்டத்தரணி வீடியோ, புகைப்படங்கள் எடுத்திருந்தார்.
பின்னர், காதலியை அடித்து தனது வீட்டிலிருந்து விரட்டியுள்ளார்.
ஏப்ரல் 5, 2019 அன்று, காதலி மேற்கொண்ட கர்ப்ப பரிசோதனையின் போது, அவர் கர்ப்பம் தரித்திருந்தது தெரிய வந்தது. இதை, சட்டத்தரணிக்கும் அறிவித்துள்ளார். எனினும், கரப்பத்தை கலைக்கும்படி சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.
குழந்தையின் இதயத்துடிப்பை தான் உணர்வதாகவும், அதை கொல்ல முடியாதென்றும் அந்த பெண் மறுத்து விட்டார்.
ஜூன் 2019 இல், குறிப்பிட்ட பெண்ணை மிரட்டிய சட்டத்தரணி, அந்த குழந்தை தன்னுடையதென சொல்ல வேண்டாமென மிரட்டியுதுடன், குழந்தையை சுமக்க அவளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தி பல குறுஞ்செய்திகளை அனுப்பினார்.
கர்ப்பத்தை கலைக்கும்படி மிரட்டி குறுஞ்செய்திகள் அனுப்பினார்.
பின்னர், அந்த பெண்ணை நேரில் சந்தித்து, சில சலுகைகள் வழங்குவதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார். எனினும், கர்ப்பத்தை கலைக்க அந்த பெண் மறுத்ததையடுத்து, பாலியல் உறவின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை கொண்டு, சில வீடியோக்களை உருவாக்கினார்.
உடனடியாக கருவை கலைக்கா விட்டால் வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டியதையடுத்து, குறிப்பட்ட பெண் பொலிசில் முறையிட்டார்.
அவர் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தாக்குதல் நடத்தியதாக ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் கிரிமினல் குற்றமான துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தற்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சட்டத்தரணி எதிர்வரும் ஏப்ரல் 30 ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.