உடல் பருமனாக இருந்த காரணத்தினால் தனது காதலனால் நிராகரிக்கப்பட்ட பெண்ணொருவர், மிஸ் கிரேட் பிரிட்டன் பட்டத்தை வென்றுள்ளார். காதலனால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, தனது உடலை மெலிய வைத்து இந்த இலக்கை எட்டியுள்ளார்.
பிரித்தானியாசை சேர்ந்த ஜெனிபர் அட்கின் என்ற பெண்ணே, தனது உடல் எடையில் 112 பவுண்ட்களை இழந்து அழகுராணியாக முடி சூடினார்.
இதனால், இனிமையான பழிவாங்கல் என பிரித்தானிய ஊடகங்கள் இந்த சம்பவத்தை சித்தரித்துள்ளன.
24 வயதில் ஜென் அட்கின், தனது காதலனால் நிராகரிக்கப்பட்ட போது 245 பவுண்ட் நிறையிலிருந்தார். இரண்டு வருடத்தில் 112 பவுண்ட் நிறை குறைத்து, மிஸ் கிரேட் பிரிட்டன் பட்டம் வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் நோர்த் லிங்கன்ஷையரில் உள்ள உல்செபியைச் சேர்ந்தவர் இவர். 2011 ஆம் ஆண்டில் தனது முன்னாள் காதலனை சந்தித்திருந்தார். அவரது உடல் எடை அதிகரித்து வருவதாக காதலன் தொடர்ந்து குறைபட்டு வந்தார்.
2015 ஆம் ஆண்டளவில் அந்த பெண்ணின் எடை 238 பவுண்ட்களாக அதிகரித்தது. பின்னர் சிறிது காலத்தில் காதலன் பிரிந்து சென்று விட்டார்.
மெலிதான பிறகு, அட்கின் அழகுப் போட்டி உலகில் சேர்ந்தார். மூன்றாவது முயற்சியில் மிஸ் கிரேட் பிரிட்டன் கிரீடத்தை வென்றுள்ளார். தனது முதல் இரண்டு முயற்சிகளில், அட்கின் 2017 இல் போட்டி அரையிறுதிக்கு முன்னேறினார். 2018 இல் முதல் ரன்னர்-அப் ஆனார்.
“நான் இதைச் செய்யத் தொடங்கியபோது, இது ஒரு வேடிக்கையாக இருந்தது, நான் எவ்வளவு தூரம் வருவேன் என்று நான் நினைத்ததில்லை. மிஸ் கிரேட் பிரிட்டனை வென்றது ஒரு நீண்ட மற்றும் கடினமான, ஆனால் ஆச்சரியமான பயணத்தின் முடிவைக் குறிக்கிறது. ” என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
முன்னாள் காதலன் பிரிந்து சென்றாலும், தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில் நுழைந்துள்ளார்.
கடினமாக உடற்பயிற்சியின் மூலமே, தனது உடலை மெலிய வைத்ததாக கூறினார்.