1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…
தனது தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும்.
பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.
பரிகாரம்: ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…
மனசாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும்.
தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். அரசியல்துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: பைரவரை தரிசித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…
நட்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.
தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும்.
பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். அரசியல்துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்: நவகிரகத்தில் குருவிற்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…
எந்த கடினமான சூழ்நிலையிலும் நிதானமாக முடிவெடுக்கும் நான்காம் எண் அன்பர்களே எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது.
குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
புது தொழிலில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை. பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப் பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…
வாழ்வில் நேர்வழியில் சென்று வெற்றி பெறும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும்.
தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…
கொடுத்த வாக்கை காப்பாற்றும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமாக கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் கிடைக்கும். வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கை யாளர்கள் கிடைப்பார்கள். புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனை குறையும்.
பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான சுபச்செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.
பரிகாரம்: பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…
ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைவரிடமும் சரிசமமாக பழகும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும்.
திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…
தனது வாதத்தால் வெற்றி பெறும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியத் தடை ஏற்பட்டாலும் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும்.
அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.
பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு…
பேச்சில் தெளிவு கொண்ட ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஏற்பட்டாலும் செலவு கட்டுக்குள் இருக்கும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.
பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.