தமிழகத்தில் தனிமையில் இருந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன், செல்போனில் வீடியோ எடுத்த இளைஞனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பார்க்கவோ, பகிரவோ கூடாதென குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி கூறியுள்ளார்.
அப்படி அதை மீறுபவர்கள், போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறார்களின் ஆபாச படங்களை பார்த்து பகிர்ந்து வந்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தீவிர படுத்திய காவல்துறையினர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் வலையப்படியில் 10 வயது சிறுமி ஆபாச படம் எடுத்த கல்லூரி மாணவர்
சண்முகபாலன் என்பவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலிய சிலுமிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதை தனது செல்போனில் படம்பிடித்து சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், இளைஞனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.