ஈரானில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட எம்.பி முகமது அலி ரமசானி தஸ்தக் உயிரிழந்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு அஸ்தானா அஷ்ரஃபி நகரத்திலிருந்து முகமது அலி ரமசானி தஸ்தக் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஸ்தக் காய்ச்சலால் இறந்ததாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் மற்ற ஊடகங்கள், சமீபத்தில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று கூறுகின்றன.
ஈரானின் துணை சுகாதார அமைச்சர் மற்றும் பல முக்கிய எம்.பி.க்களுக்கு கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தஸ்தக் காய்ச்சல் மற்றும் ரசாயன காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று ஈரானின் ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனத்தை மேற்கோளிட்டு தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் மற்ற பத்திரிகையாளர்கள் பெப்ரவரியில் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தஸ்தக் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
وفاة النائب الجديد من تيار المحافظين في البرلمان الإيراني " محمد رمضاني " والذي أنتخب قبل اسبوع من مدينة " آستانه اشرفيه " على أثر إصابته بفيروس كورونا .. الإعلام الإيراني يقول الفايروس أنتقل من نائب آخر إلى رمضاني . pic.twitter.com/Bh7erJom2i
— محمد مجيد الأحوازي (@MohamadAhwaze) February 29, 2020
ஈரானில் சனிக்கிழமையன்று 24 மணி நேரத்திற்குள் 205 புதிய கொரோனா வைரஸ் வழக்குகளை உறுதிப்படுத்தியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 593 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் 43 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், சர்வதே ஊடகம் ஒன்று ஈரானிய மருத்துவமனை ஆதாரங்களை மேற்கோளிட்டு இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் 210ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.