நாடாளுமன்ற உறுப்பினர்களின் வால்களாக செயற்படுபவர்களிற்கு மாகாணசபை ஆசனம் வழங்கக்கூடாது, புது முகம் என்ற பெயரில் ஓய்வூதியம் பெற்றவர்களை அரசியலுக்கு அழைத்து வரக் கூடாது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிப முன்னணியின் யாழ் கிளை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை வாலிப முன்னணியின் யாழ் மாவட்ட கிளை கூட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்போது பல அதிரடியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
நாடாளுமன்ற தேர்தலில் எம்.பிக்கள் அனைவரும் கூட்டாக செயற்பட வேண்டும், தனித்தனியே வாக்கு சேகரிக்காமல் மூவருக்கும் சேகரிக்க வேண்டும், அனைவரும் ஒரு வாக்கை தலைவருக்கும் சேகரிக்க வேண்டும், புதுமுகங்கள் என்ற பெயரில் அரச உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், வர்த்தகர்கள் அழைத்த வரப்படாமல் கட்சிச் செயற்பாட்டாளர்கள்- உறுப்புரிமை கொண்டவர்கள் களமிறக்கப்பட வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரத்தை விற்பனை செய்யும்போது மனமுவந்து ஒரு பகுதி நிதியை கட்சிக்கு வழங்க வேண்டும், எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இளைஞர் அணி சார்பில் ஐவரை யாழில் களமிறக்க வேண்டும், அந்த ஐவரும் எம்.பிக்களின் செயலாளர்கள், வால்களாக அல்லாமல் இளைஞரணி சிபாரிசு செய்பவர்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானங்கள் கட்சித் தலைவர், செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.