‘சுபீட்சத்தின் நோக்கு” என்கின்ற தேசிய கொள்கை வேலைத்திட்டம் -2020 இன்று மட்டக்களப்பு பாசிக்குடாவில் நடைபெற்றது.
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் சமூர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேசத்தின் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர் மா.காளிராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்போது பாசிக்குடா கடற்கரையை அண்டிய பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்க்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு துப்பரவு பணிகள் நடைபெற்றது.
இதன்போது கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், பிரதேச சபை உறுப்பினர்.பொ.புஸ்பேந்திரன் மற்றும் சமூர்த்தி வங்கி முகாமையாளர் ந.விஜிதாரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பசுமையான சூழலை நாம் கொண்டிருக்கின்ற போது நாம் இயற்கையான சூழலையும் சுவாசத்தினையும் சுவாசிக்க முடியும் இதற்கான சூழுலை பெற நாம் பயன்தரு மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் இதன்போது தமதுரையில் தெரிவித்தார்.