இந்தியாவில் குடியுரிமை சட்டம் முஸ்லீம் மக்களுக்கு எதிராக அமைந்துள்ளதாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அதன் உச்சகட்டமாக இந்திய தலைநகரான டெல்லியில் ரத்தக்களமாக மாறியதில் இருபதுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதற்கு உளவுத்துறையின் திறனிழந்த செயல்முறைதான் காரணமென பலரும் குற்றம் சாட்டிவந்தனர்.
அதில் ஒருவர் தமிழ் நாட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகும். இந்த சம்பவங்களுக்கு காரணமாக இருந்த மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன் என்று அறிவித்திருந்தார். “ரஜினிகாந்தின் பேச்சு எங்களுடைய மனதில் நம்பிக்கையை தருகின்றது” என்று இன்று ஹாஜ் முஸ்லீம் இயக்க தலைவரான அபுபக்கர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்களில் மட்டுமின்றி அரசியலிலும் அதிகம் காட்டிவருவதால் விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவாரென்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் “அண்ணாத்த” படத்தில் நடிகை மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாராவுடன் நடித்துவருகிறார்.