உலகிலேயே ஆழமான ஆறான காங்கோவிற்கு அருகில் வாழும் மீனவர்கள் 2007 ஆம் ஆண்டு ஒரு அறிய வகை மீனை கண்டெடுத்தனர். ஆறு அடி நீலமுள்ள அந்த மீன் வெள்ளை நிறத்தில் இருந்தது மேலும் அந்த மீனுக்கு கண்கள் கிடையாது. பிற மீன்களை போலவே தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் சாகத் தொடங்கியது அந்த மீன். ஆனால் எந்த விஷயம் அதனை சாகடித்துக் கொண்டிருந்தது என்பது தான் ஆச்சரியமே.
அந்த மீனின் செவுள்கள் மற்றும் தோலுக்கு அடியில் நைட்ரஜன் முட்டைகள் உருவாக தொடங்கியதாக அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டிரி, நியூயார்க்கிடம் இச்தையாலாஜிஸ்ட் ஸ்டியாஸ்னி கூறினார். மனிதர்களுக்கு கடலுக்கு அடியில் இருக்கும் போது வேகமாகி வரும் தண்ணீர் ஏற்றத்தால் இரத்தத்தில் நைட்ரஜன் முட்டைகள் உருவாகுவதை பென்டு ( bend) என்று கூறுவார்கள்.
இது போன்ற ஒரு விஷயம் தான் அந்த மீனிற்கும் நிகழ்ந்திருக்கலாம். இது குறித்து ஸ்டியாஸ்னி கூறுகையில்,”மனிதர்களுக்கு ஏற்படும் பென்டுகளால் இந்த மீன் சாகக் கூடுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி இருந்தால் அந்த ஆறு எவ்வளவு ஆழமான ஆறாக இருக்கக் கூடும்…?” என்கிறார்.
காங்கோ ஆறானது 2500 மைல்கள் ஓடும் ஒரு ஆறு. அது காங்கோ மற்றும் அங்கோலாவிற்கு இடையே உள்ள ஒரு எல்லையாக அமைகிறது. இந்த அறிய வகை மீனைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு ஆராய்ச்சியான ‘தி காங்கோ பிராஜக்டில்’ (The Congo Project) ஸ்டியாஸ்னி படித்து வருகிறார். இது University of Marien Ngouabi மற்றும் University of Kinsasha வின் கூட்டு முயற்சியே இந்த ஆராய்ச்சி ஆகும்.
இந்த அறிய வகை மீன் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பதை கண்டுபிடிக்க தி காங்கோ பிராஜக்ட் National Geographic Society மற்றும் US Geological Survey வுடன் இணைந்துள்ளது. காங்கோ ஆறுக்குள் சென்று இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அந்த ஆறிற்கு படகு வாயிலாக செல்ல முடியாது. அது மிகவும் ஆபத்து வாய்ந்த ஒரு ஆறு.
காங்கோ ஆற்றின் அடிப் பகுதியில் இந்த அறிய வகை மீன் வாழக் கூடும். அப்போது இரத்தத்தில் கலக்கும் நைட்ரஜன் முட்டைகளால் இறக்கும் தருணத்தில் ஆற்றின் மேலே வந்து விடுகின்றன. ஆனால் அவற்றிற்கு ஏற்படும் பென்டின் காரணமாக குடல் வெடிக்கப்பட்டு அவற்றில் உள்ள உணவு பொருட்கள் அனைத்தும் சிதறி ஆற்றில் கலந்து விடுவதால் அந்த மீன் என்ன சாப்பிடும் என்பதை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறுகிறார் ஸ்டியாஸ்னி.