அமேஷான் நிறுவனம் தனது தளத்திலிருந்து பல பொருட்களை அதிரடியாக நீக்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் சுமார் ஒரு மில்லியன் வரையான பொருட்கள் நீக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப் பொருட்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை தடுப்பதற்கோ அல்லது அவற்றின் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ பயன்படுத்த முடியும் என விளம்பரப்படுத்தப்பட்டவையாகும்.
இவற்றில் அதிகமானவை மக்களை தவறாக வழிநடத்தக்கூடியவையாக காணப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே குறித்த பொருட்களை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது அமேஷான்.
சுமார் மூவாயிரத்தை நெருங்கவுள்ள கொரோனா வைரஸ் தாக்க மரணங்களால் உலகளவில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனை பயன்படுத்தி பல்வேறு வியாபார உத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.