Loading...
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
Loading...
இப்படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அங்கு மிகவும் பனி சூழ்ந்த பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சில சமயங்களில் பனிமழை கூட அங்கு பொழியுமாம். இங்கு மிகவும் சிரமப்பட்டுதான் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
Loading...