இந்தியாவில் இளைஞன் ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்திரப்பிரதேசத்தை இளைஞன் இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார். ஒருவரை ஏமாற்றி இன்னொருவரை காதலித்து வந்ததால், இந்த விஷயம் தெரியாமல் இருந்தது.
அதன் பின், இந்த விஷயம் இரண்டு பெண்களுக்குமே தெரியவர, உடனடியாக தாலி கட்டும் படி கூறியுள்ளனர். இருவருமே அந்த இளைஞன் வேண்டும் என்று கூறியதால், இருவரையும் சமாதானப்படுத்தி அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளான்.
அங்கு இரண்டு தாலிகள் வாங்கிய அந்த இளைஞன் இருவருக்கும் மாறி மாறி தாலி கட்டினார். இந்த வித்தியாசமான திருமணத்தை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து தாலி கட்டிய இளைஞர் https://t.co/U6HmNlhE9u pic.twitter.com/GoLI2cXpeZ
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 3, 2020
இருப்பினும், குறித்த திருமணத்தை, 3 குடும்பத்தினரும் ஏற்றுக் கொள்ள மறுத்து உள்ளதால் தற்போது மூன்று பேரும் எங்கு செல்வது என்ற தெரியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது