இணையத்தில் வௌியான சிறுமி ஒருவரின் துஷ்பிரயோக காணொளி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குறித்த காணொளி இணையத்தில் பரவியமை தொடர்பில் இணைய ஆய்வினை மேற்கொண்டு சந்தேக நபர்களை இனங்காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோல், சந்தேக நபர்களை கைது செய்வதை விரைவுபடுத்துவதற்காக இணையத்தில் பரவிய காணொளியில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த காணொளியில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதாவது தகவல் இருந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழுள்ள தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
தொலைப்பேசி இலக்கங்கள்
077 78 78 414 , 071 82 64 024