Loading...
பல்லேகல விளையாட்டு மைதானத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவரை துன்புறுத்திய நபர் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பல்லேகல மைதானத்தில் இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளிற்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியின்போது, மதுபோதையிலிருந்த ஆசாமியொருவன், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை துன்புறுத்தும் வீடியோ வெளியானது.
இலங்கை தேசியக்கொடியை போர்த்தியிருந்தார் என குறிப்பிட்டு, சுற்றுலாப்பயணியான பெண்ணொருவருடன் அவன் ரகளையில் ஈடுபட்டான்.
Loading...
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பதில் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைத்து, உடன் விசாரணையை ஆரம்பிக்கும்படி கோரியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Loading...