உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 3000 கடந்துள்ள நிலையில், அதன் பாதிப்பு முதல்முறையாக இந்தியாவில் கேரள மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பினர்.
டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ள இத்தாலி நாட்டு பயணிக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது, இந்தியாவில் 28 பேருக்கு கொரானா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலியர்கள் 16 பேருக்கு கொரானா தொற்றுடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் 3 பேருக்கு கொரானா தொற்று – டெல்லியில் ஒருவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.