Loading...
டெங்கு தொற்று நோய் பரவுதல் காரணமாக நாட்டின் 10 மாவட்டங்களின் சுகாதார சேவையின் 30 மருத்துவ அதிகார பிரிவின் சுகாதார சேவையாளர்களுக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி,யாழ்ப்பாணம், இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற பிரதேசங்களில் டெங்கு தொற்று தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Loading...
இது குறித்து விசேட கூட்டம் ஒன்று சுகாதார அமைச்சின் வளாகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற போதே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய 48 ஆயிரம் பேர் டெங்கு தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் 77 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...