மலையாளம் மற்றும் தமிழில் உருவான ‘நேரம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், குழந்தை நட்சத்திரமான நஸ்ரியா.
இந்த படத்தை தொடர்ந்து, ‘ராஜா ராணி’, ‘நையாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற பல படங்களில் நடித்தார். முன்னணி நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப்பின் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்த இவர் 2018ஆம் ஆண்டு கூடே என்கிற மலையாள படத்தில் கம் பேக் கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து இப்போது தன்னுடைய கணவருடன் சேர்ந்து ‘ட்ரான்ஸ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நஸ்ரியா சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. மேலும் வேறு ஒரு நபருடன் படுக்கை அறை காட்சியிலும் நஸ்ரியா நடித்துள்ளார்.