கிருஷ்ணகிரியில் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்…,”

இந்து கோயில்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாகும். அதில் எந்த மாற்றமும் இல்லை.ஆனால், ஸ்டாலினுக்கு புராதனச் சின்னங்களுக்கும், நினைவு சின்னங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. புராதனச் சின்னங்களை எடுத்துக் கொண்டாலும், 3,691 புராதனச் சின்னங்களை மத்திய அரசு பாதுகாக்கிறது. பல மாநில அரசுகள் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவில்லை என்பதால் மத்திய அரசு அதை பாதுகாக்கவுள்ளதாக மத்திய அமைச்சா் அண்மையில் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் உள்ளதாக மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளார். இந்தக் கோயில்களை மத்திய அரசு எடுப்பதாக அவா் தெரிவிக்கவில்லை.தொல்லியல் துறை எந்தக் கோயிலையும் நடத்தவில்லை. தமிழக இந்து சமய அறநிலையத்துறை தான் கோயில்களையும், வழிபாடுகளையும் செய்து வருகின்றது.. அதிமுக அரசில் கோயில்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றது.