சண்டைக்காட்சி நடிகர்கள் சங்கத்தின் 50-வது ஆண்டை பெருமைப்படுத்தும் வகையில் ‘சினிமா வீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்துக்கு குரல் கொடுக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கய்யா நாயுடுவை சந்தித்த ஐஸ்வர்யா தனுஷ், இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் வழங்கும் பட்டியலில் ஸ்டண்ட் காட்சி இயக்குனர்களும் கவுரவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பரிசீலித்த மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு அடுத்த ஆண்டு நடைபெறும் 64-வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறப்பான வகையில் சண்டை காட்சிகளை அமைக்கும் ஸ்டன்ட் மாஸ்டருக்கு தேசிய விருது அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறந்த ஒலியமைப்பு மற்றும் சிறந்த லொக்கேஷன் ஒலிப்பதிவாளர் என்ற பிரிவின்கீழும் அடுத்த ஆண்டில் இருந்து தேசிய விருதுகள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.