Loading...
பண்டிகைக்கால பயணங்களை முன்னிட்டு மேலதிக புகையிரத சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்குள் குறித்த புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
Loading...
மேலும், கொழும்பிலிருந்து பதுளை நோக்கி செல்வதற்கு இன்று முதல் இரண்டு புகையிரதங்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கியும், மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கியும் மேலதிகமாக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Loading...