Loading...
புதிய அரசியலமைப்பை தயாரிக்காது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
அந்தக் கட்சியை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இதன்படி புதிய அரசியலமைப்பை தயாரிக்காது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய விடயங்களில் மாத்திரம் திருத்தம் மேற்கொள்வதற்கும் மற்றைய விடயங்களை அவ்வாறே விடுவதற்கும் தீர்மானித்து கட்சிக்குள் சகலரிடமும் ஒரே நிலைப்பாட்டை ஏற்படுத்தி அதனை அரசாங்கத்திடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
Loading...