Loading...
இம் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் குவைத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதனை உறுதிப்படுத்த சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிப்பது இரத்து செய்யப்பட்டுள்ளது.
குவைத் அரசாங்கத்தின் சிவில் விமான சேவை பிரதிப்பணிப்பாளர் நாயகத்தினால் இதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த வைத்திய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சில நாடுகளில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்வதில் உள்ள தொழில்நுட்ப சிரமங்களினால் இதனை இரத்து செய்திருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...