தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு வரவேற்புக்காக மாட்டு வண்டியில் பயணித்த மணமக்களின் செயல் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தின் கூகலூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன், இவரது மகள் சுபாசினி(வயது 23).
இவருக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பரணி பிரகாஷ்(வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது.
இதன்படி நேற்று முன்தினம் கருங்கரடு முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் கூகலூரில் உள்ள மண்டபத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்காக மாட்டு வண்டியில் மணமக்கள் புறப்பட்டு சென்றனர்.
இதை கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்ததுடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ஆர்த்தி எடுத்து மணமக்களை வரவேற்றனர்.
இதுகுறித்து மணமக்கள், ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகையில்லா சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாட்டுவண்டி பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் எங்களுக்கு புதிய அனுபவம் ஏற்பட்டதுடன், வாழ்நாள் முழுவதும் எங்களால் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகவும் இது ஆகிவிட்டது என தெரிவித்தனர்.
அத்துடன் மணமகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் தொகுக்கப்பட்டிருந்ததும் கூடுதல் சிறப்பாக இருந்ததாம்.