லண்டலிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் ஆனது கையடக்க தொலை பேசியின் திரைகளில் சுமார் 7 நாட்கள் வரை உயிர்வாழும் என கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாம் கையடக்க தொலைபேசிகளை நாளொன்றுக்கு எண்ணிலடங்கா தடவைகள் பார்வையிடுகின்றோம்.
பார்வையிடும் பட்சத்தில் எங்களது உடலில் எவ்விதமான தூண்டுதல்கள் காணப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாது கையடக்க தொலைபேசியின் திரையினையே பார்வையிடுகின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் சிலவேளைகளில் எமக்கு இருமல் மற்றும் தும்மல் ஏற்படுகின்றது.
கொரோனா தொற்றுள்ள ஒருவர் அருகிலிருந்து இருமினாலோ அல்லது தும்மினாலோ அருகில் ஒருவர் கையடக்க தொலைபேசியினை பயன்படுத்துவாராயின் அவரது திரையில் விரைவில் சென்று கொரோனா உயிர்வாழ சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொள்ளும்.
அது மாத்திரமின்றி குறித்த கையடக்க தொலைபேசியினை சிறுவர்கள் எவரேனும் வீடியோ கேம்களுக்காக பயன்படுத்தினால் தாமதமின்றி உடனடியாக தொற்றிக்கொள்ளும்.
ஆகையினால் கையடக்க தொலைபேசியின் திரையினை 61 முதல் 71 வீதம் வரையில் செறிவு கொண்ட சலவைநீரில் ஈரப்படுத்திய துணியில் நாளொன்றுக்கு இரு தடவைகள் துடைக்குமாறும் விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது மாத்திரமின்றி படுக்கையறைகள் மற்றும் கழிவறைகளில் கொரோனா தொற்றானது அதிகம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்ற புதிய தகவலினையும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதனால் சுற்றுலா செல்லும் இடங்களில் தங்கும் சுற்றுலா பயணிகள் அவதானத்துடன் செயற்படவேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.