முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது P40 Lite E எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
முதன் முறையாக இக் கைப்பேசியானது ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
6.39 அங்குல அளவு, IPS LCD தொழில்நுட்பத்தினாலான திரையினை உடைய இக் கைப்பேசியில் Kirin 810 processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.
இதன் சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
மேலும் 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய மூன்று பிரதான கமெராக்களையும், 8 மெகாபிக்சல்களை உடைய ஒரு செல்ஃபி கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.
தவிர நீடித்து உழைக்க்ககூடிய 4,000mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.
எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.