கொரோனா அச்சம் காரணமாக லண்டனில் உள்ள தனது அலுவலகத்தை பேஸ்புக் நிர்வாகம் மூட உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர் அலுவலகத்தில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு ஊழியர் 2020 பிப்ரவரி 24முதல் 26 வரைலண்டனில் உள்ள தங்களது அலுவலகங்களை பார்வையிட்டதாக பேஸ்புக் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக திங்கட்கிழமை வரை லண்டனில் உள்ள தங்களது அலுவலகங்களை மூடுவதாகவும், ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிட்ஸ்ரோவியாவில் உள்ள லண்டன் அலுவலகத்தில் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பால் தற்போது அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.