பிரித்தானியாவுக்கே மகாராணி, சொந்த வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டிய ஒரு அசௌகரியமான சூழல் ஏற்பட்டுவிட்டது.
பிரித்தானியா மகாராணியார் வியாழக்கிழமைகளின் மாலைப்பொழுதில் விண்ட்சருக்கு வந்து தங்கிவிட்டு, செவ்வாய்க்கிழமை லண்டனுக்கு புறப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த வாரமும் அவர் விண்ட்சர் மாளிகைக்கு செல்ல, அங்கே கதவுகளைத் திறக்க வாசலில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.
உடனே காரிலிருந்து குதித்தோடிய ஒரு பெண் பாதுகாவலர் கதவைத் திறக்க முயல, அதிக கனமான அந்த மரக்கதவுகளை அவரால் திறக்கமுடியவில்லை. மழை வேறு பெய்ய, மகாராணியார் தன் வீட்டு முன்னாலேயே சிறிது நேரம் காத்திருக்கவேண்டியதாயிற்று.
பின்னர், மாளிகையின் வேறொரு வாசல் வழியாக செல்லலாம் என முடிவு செய்து மகராணியாரின் காரும், அவரது பாதுகாவலர்களின் காரும் புறப்பட்டன.
சிறிது நேரத்தில், கதவு திறக்கப்படும் என்ற தகவல் பாதுகாவலர்களுக்கு கிடைக்க, இரண்டு கார்களும் மீண்டும் ஒரு யூ டர்ன் அடித்து மாளிகைக்கு திரும்பின.
நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், 30 ஆண்டுகளில் ஒரு முறை கூட இப்படி நடந்ததில்லை என்று கூறினார்.
பாதுகாவலர் யாரோ வேலை நேரத்தின்போது தூங்கிவிட்டாரா, அல்லது மகாராணியாரின் வருகையை எதிர்பார்க்கவில்லையா தெரியவில்லை, என்றாலும் இப்படி ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டது கூட இல்லை.
மகாராணியார் அவரது சொந்த வீட்டிற்கு முன்னாலேயே காத்து நிற்பதை பார்ப்பது அபூர்வம் என்கிறார் அவர்.