எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது.
இது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தல் சம்பந்தமான விசேட கலந்துரையாடல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடந்து வருகிறது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் விசேட அறிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்னமும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய தேசிய சக்தியுடன் இணைந்து செல்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி தயாராக இருப்பதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
எனினும் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக கொண்டு யானை சின்னத்தின் கீழேயே போட்டியிடமுடியும் என்பதை ஐக்கிய தேசியக்கட்சி தரப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையில் வேட்பாளர் சபை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலேயே செயற்படும் என்றும் அந்த தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏற்கனவே ஐக்கிய தேசிய சக்தியின் யாப்பில் திருத்தம் செய்து ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவுக்கு சமர்பிக்குமாறு கோரப்பட்டபோதும் சஜித் தரப்பு அதனை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.