Loading...
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் காபுல் நகரில் ஒரு நினைவு தின நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவரான அப்துல்லா அப்துல்லா பங்கேற்றார். அரசியல் தொடர்பாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அப்துல்லா உரையாற்றிக்கொண்டிருந்தபோது அந்த கூட்டத்தை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும், ராக்கெட்களை ஏவுயும் திடீர் தாக்குதல் நடத்தினர்.
Loading...
இந்த கோர தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அப்துல்லா உயிர்தப்பினார். இந்தச் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Loading...