அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது, இந்தியாவுக்கு கவலையளிக்கும் விடயம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரான யோகேந்திர குமார இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் இந்தியா- சீனா இடையே இழுபறிப் போர் என்ற தலைப்பில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் இதழ் செய்தி ஒன்றிலேயே அவரது இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ், மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இந்திய இராஜதந்திரியான யோகேந்திர குமார், இதுபற்றி மேலும் கருத்து வெளியிடுகையில்,
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உண்மையில் இது இந்தியாவுக்கு கவலை தரக் கூடிய விடயம். இந்தியப் பெருங்கடலில் தனது செயற்பாடுகளை சீனா அதிகரிக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.
இது மிகப் பெரிய சிக்கலான விவகாரமாக உருவெடுக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.