Loading...
அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த பௌத்த விகாரை இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வளாகத்திலேயே மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பௌத்த விகாரை மற்றும் அதனோடு இணைந்த புத்தர் சிலைகள் என்பன இன்று மாலை திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது
Loading...
குறித்த பௌத்த விகாரை திறப்பு விழாவில் தென் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் வட மாகாணத்தின் பல்வேறு விகாரைகளது பௌத்த துறவிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Loading...