ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றியுள்ளது.
அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் இதை அறிவித்துள்ளார்.
#COVID19 positive for 45Y male who traveled from Oman.Due to d stringent screening process,we identified & isolated the Pt for further treatment @ RGGH Chennai. Pt is stable &under hospital observation,#TNHealth is fully functional to combat d situation. Pls avoid state of panic
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 7, 2020
அதில் அவர், ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அந்த நபர் உடல் நிலை சீராக இருந்து வருகிறது.
தொடர்ச்சியாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தமிழக சுகாதாரத்துறை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது.
எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை. இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முதன்முதலாக தமிழகத்திலும் கொரோனா கால் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.